கிரிக்கெட்

லக்னோ அணியில் இணையும் ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஷ், விரைவில் லக்னோ அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லக்னோ அணி தற்போது 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஷ், விரைவில் லக்னோ அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி இவரை ரூ.8.60 கோடிக்கு வாங்கியது.ஆனால் தனது திருமணத்திற்காக நடப்பு சீசனின் முதல் பாதியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் விரைவில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.