கிரிக்கெட்

இங்கிலாந்து டி20 தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்

ஒருநாள் தொடரின்போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள பக்கவாட்டு தசைப் பிடிப்பு (Side Strain) காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

ஆஸ்திரேலிய அணி

நாதன் எலிஸுக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பென் ட்வார்ஷுயிஸ் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருந்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் சர்வதேசப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது

SCROLL FOR NEXT