ஐதராபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக அக்சர் விளையாடிய 100வது ஐபிஎல் போட்டியாகும். டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல், அந்த அணிக்காக 100 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவருக்கு முன்பு, ரிஷப் பண்ட் மட்டுமே டெல்லி அணிக்காக 100-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியிருந்தார்.