கிரிக்கெட்

மும்பை ரஞ்சி அணியின் துணை கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்

ரஞ்சி டிராபி சீசனுக்கான மும்பை அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்தியாவின் யு-19 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு கேப்டனாக இருந்த ஆயுஷ் மாத்ரே, 2026–27 ரஞ்சி டிராபி சீசனுக்கான மும்பை அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணிக்கு சித்தேஷ் லாட் கேப்டனாக செயல்படுகிறார்.

மும்பை அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 11ஆம் தேதி வான்கடே மைதானத்தில் சண்டிகரை எதிர்கொள்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆயுஷ் மாத்ரேவை எதிர்கால கேப்டனாக உருவாக்கும் நோக்கத்திலும் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT