Image courtesy : @TheRealPCB 
கிரிக்கெட்

20 ஓவர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

20 ஓவர் உலகக் கோப்பையில் அக்டோபர் 24 அன்று தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

இஸ்லாமாபாத்

20 ஓவர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான அணியில் சோயிப் மாலிக், சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகிய மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. தொடக்க வீரர் சர்ஜீல் கான், ஆல்ரவுண்டர் பஹீம் அஷ்ரம் ஆகியோரும் தேர்வாகவில்லை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகிய இருவரும் 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு முக்கிய மற்றும் மூத்த வீரர்கள் சேர்க்கப்படாதது பல்வேறு விமர்சனத்தை எழுப்பியுள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பையில் அக்டோபர் 24 அன்று தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள வீரர்கள் விவரம்:

பாபர் அசாம்( கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோயிப் மக்சூட், அசாம் கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன்.

மாற்று வீரர்கள்: உஸ்மான் காதர், ஷாநவாஸ் தானி, பகார் சமான்.

SCROLL FOR NEXT