கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: டி வில்லியர்ஸ் குற்றச்சாட்டு

முதலாவது டெஸ்டிலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். '

கேப்டவுன்,

2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது உப்புத்தாளை கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்த போது கேமராவில் சிக்கினர். பந்தை சேதப்படுத்தும் சதிதிட்டம் ஒரு சிலருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும் என ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சமீபத்தில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு மீண்டும் புயலை கிளப்பினார். இந்த நிலையில் அந்த தொடரில் விளையாடிய தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் அடுத்த குண்டு போட்டுள்ளார்.

டி வில்லியர்ஸ்

கேப்டவுனில் அல்ல அதற்கு முன்பு டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டிலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். 'நான் டர்பனில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அந்த மைதானத்தில் இவ்வளவு சீக்கிரம் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் ஏதோ ஒன்றால் பந்தை சேதப்படுத்தியுள்ளனர்' என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT