கிரிக்கெட்

வங்காளதேசம் - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலிய அணி 187 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது.

டாக்கா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், இரு அணிகளுக்கும் இடையே கடந்த 9ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் வெற்றிபெற்றது.

இந்நிலையில், வங்காளதேசம் -ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜோஷ் இங்கிலிஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 42 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 187 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.