கிரிக்கெட்

பி.எஸ்.எல். போட்டியில் ஆட நஹித் ராணாவுக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி

பெஷாவர் அணி நிர்வாகம் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 23 வயதான நஹித் ராணா, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்.) பெஷாவர் ஜால்மி அணிக்காக விளையாடி வந்தார். பணிச் சுமை காரணமாக அவரை நாடு திரும்பும்படி கடந்த வாரம் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பெஷாவர் ஜால்மி அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் இஸ் லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தி இறுதிப்போட் டிக்கு முன்னேறி இருப்பதால் நஹித் ராணாவை விளையாட அனுமதிக்கும்படி பெஷாவர் அணி நிர்வாகம் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டது. இதை யடுத்து வருகிற 3-ந்தேதி லாகூரில் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆடுவதற் காக அவருக்கு தடையில்லா சான்றிதழை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது.