மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ததைத் தொடர்ந்து, வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ இந்த வெற்றி தங்கள் நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஷான்டோ,
இது எந்த வடிவத்திலும் வங்காளதேசத்தின் மிகப்பெரிய வெற்றி. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான சாதனைகளை படைக்க விரும்புகிறோம். சில ஆண்டுகளில் அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.என தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்ற வேண்டும் என்பதே வங்காளதேச அணியின் அடுத்த இலக்காக உள்ளது.