கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிப்பு

இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.#trinationseries

டாக்கா,

வங்காளதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் விளையாடுகின்றன. வருகிற ஜனவரி 15ந்தேதி தொடங்க உள்ள இந்த போட்டிகளில் முதலில் வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் விளையாட உள்ளன.

இதற்கான வங்காளதேச அணி வீரர்கள் அடங்கிய குழுவை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் மிர்புர் என்ற இடத்தில் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறும். இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும் வங்காளதேச அணியில் அனாமல் ஹேக், சன்ஜாமுல் இஸ்லாம் மற்றும் முகமது மிதுன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேவேளையில், வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் ஆகியோர் போட்டி தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்த போட்டி தொடருக்கு பின்னர் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வங்காளதேசம் விளையாட உள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 31ந்தேதி தொடங்கும். முதல் டி20 போட்டியானது பிப்ரவரி 15ந்தேதி தொடங்க உள்ளது.

வங்காளதேச அணி விவரம்: மஷ்ராஃப் பின் மோர்டாசா (கேப்டன்), முஷ்பிகுர் ரகீம், தமீம் இக்பால், இம்ருல் கயேஸ், மஹ்முதுல்லா, ஷாகீப் அல் ஹசன், சபீர் ரஹ்மான், முகமது மிதுன், அனாமல் ஹேக், நசீர் உசைன், முஸ்டாபிஜுர் ரஹ்மான், மெஹிடி ஹசன் மிராஜ், ரூபெல் உசைன், சன்ஜாமுல் இஸ்லாம், முகமது சைபுதீன் மற்றும் அபுல் ஹசன்.

SCROLL FOR NEXT