கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

டாக்கா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது.

முதல் டெஸ்ட்

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

வங்காளதேசம் 213/3

இதனை தொடர்ந்து வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷத்மென் இஸ்லாம், ஹசன் தமீம் களமிறங்கினர். தமீம் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் தொடங்க வீரர் ஷத்மென் இஸ்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ஷத்மென் இஸ்லாம் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அதேபோல், லின்டன் தாஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஜோமல் வாரிகன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT