கிரிக்கெட்

வங்கதேச அணியின் சூழலை மாற்றும் திறன் முஸ்தபிசுருக்கு உள்ளது – பில் சிம்மன்ஸ் நம்பிக்கை

அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0–2 என படுதோல்வியடைந்த வங்கதேச அணியின் சூழலை மாற்றும் திறன் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. குறிப்பாக, இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் வெறும் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதனால் வீரர்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மீண்டு வர வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.

வங்கதேச அணி

இதுகுறித்து பேசிய பில் சிம்மன்ஸ், "சில புதிய வீரர்கள் அணிக்கு வரவுள்ளனர். அவர்கள் அணியின் சூழலை உற்சாகமாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். அனுபவமிக்க வீரரான முஸ்தபிசுர் அணியில் இருக்கிறார். அவர் தனது தலைமைப் பண்பையும் மகிழ்ச்சியான அணுகுமுறையையும் மீண்டும் அணிக்குக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் எப்போதும் நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். அணியினருடன் மகிழ்ச்சியாகப் பழகி அனைவரையும் சிரிக்க வைப்பார். அவர் மூலம் அணியின் உற்சாகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்" என்றார். மேலும், தென்னாப்பிரிக்கத் தொடரில் வங்கதேச அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் மிகவும் ஏமாற்றமளித்ததாகவும், முக்கியமான நேரங்களில் கேட்ச்களைத் தவறவிட்டது அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT