கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணியிடம் நிலைத்தன்மை இல்லை - கேப்டன் ஷான்டோ

கடந்த நான்கு அல்லது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தங்களது ஆட்டம் திருப்திகரமாக இல்லை.

வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, தங்கள் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் நிலைத்தன்மையை இழந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0–2 என இழந்த வங்கதேசம், முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. இதுகுறித்துப் பேசிய ஷான்டோ,

வங்கதேச அணி

கடந்த நான்கு அல்லது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தங்களது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் அணியினர் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். மேலும், அணியின் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதுடன், தொடர்ந்து வெற்றிகரமாக விளையாடுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

மேலும், வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சுத் துறையிலும் முன்னேற்றம் தேவை. தரமான வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்ட வலுவான குழுவை உருவாக்கினால் மட்டுமே வீரர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்தி அணியின் செயல்திறனை அதிகரிக்க முடியும் என்று ஷான்டோ வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT