image courtesy:ICC/ @ICC 
கிரிக்கெட்

பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த வங்காளதேசம்... டெஸ்ட் தொடரில் புதிய சாதனை!

இந்தப்போட்டியிலும் அபராமாக விளையாடிய வங்காளதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 16ஆம் தேதி சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியிலும் அபராமாக விளையாடிய வங்காளதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால், தொடரை 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதன் மூலம் சொந்தமண்ணில் பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்து புதிய சாதனையை வங்காளதேச அணி படைத்துள்ளது.