கிரிக்கெட்

சென்னையில் 'பிபிஎல்' போட்டி - நேரில் பார்க்க ரெடியா?.... டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

இபோட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

பிக் பேஷ் லீக் (பிபிஎல்) டி20 தொடரின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

டிசம்பர் 12

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் (பிபிஎல்) டி20 தொடரின் தொடக்க ஆட்டம் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இபோட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு வெளியே முதல் முறையாக!

பிக் பேஷ் லீக் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஒரு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால், சென்னையில் நடைபெறவுள்ள இந்தத் தொடக்க ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

டிக்கெட் விலை எவ்வளவு?

இந்த அதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. போட்டிக்கான டிக்கெட் விலை இருக்கை அமைப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப் கீழ் தளம்: ரூ.1,500

ஐ, ஜே, கே கீழ் தளங்கள்: ரூ.2,500

ஐ, ஜே, கே மேல் தளங்கள்: ரூ.2,000

கேஎம்கே மாடம்: ரூ.3,500

குளிரூட்டப்பட்ட சி விருந்தினர் அறைகள்: ஒரு இருக்கைக்கு ரூ.6,000

ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை

போட்டிக்கான டிக்கெட்டுகளை ‘District by Zomato’ செயலி மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான district.in மூலம் மட்டுமே ஆன்லைனில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT