கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசுத்தொகை; பிசிசிஐ அறிவிப்பு

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது

மும்பை,

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோதின. இதில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. வீரர்கள், பயற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்த பரிசுத்தொகை பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி ரூ. 27 கோடி பரிசுத்தொகை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.