புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த முன்னாள் வீரர் அஜித் அகர்கரின் பதவி காலம் கடந்த 4-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில், 'இந்திய கிரிக்கெட்டில் சில சிறப்பான தருணங்கள் நிறைந்த பதவி காலம் அது.
மூன்று ஐ.சி.சி. கோப்பைகள், இரண்டு ஆசிய கோப்பைகள், தொடர்ந்து இரு முறை ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது. 2023-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது ஆகியவை இதில் அடங்கும். ஆண்கள் அணியின் தேர்வு குழு தலைவராக உங்களது அர்ப்பணிப்பு. உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புக்கு நன்றி. உங்களது எதிர்காலப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்' என கூறி யுள்ளது.