கிரிக்கெட்

பென் டக்கெட் அதிரடி சதம்.. இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது.

லாகூர்,

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

டக்கெட் அதிரடி சதம்

தொடக்க வீரர்களாக பாண்டம் மற்றும் டக்கெட் இருவரும் அதிரடி காட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் குவித்தது. பாண்டம் 74 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை பந்துவீச்சை டக்கெட் நாலாபுறமும் சிதறடித்தார். அத்துடன் சதமடித்து அசத்தினார். அவரின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 132 பந்துகளை எதிர்கொண்ட டக்கெட், 24 பவுண்டரியுடன் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

387 ரன்கள் இலக்கு

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் பெர்னாண்டோ அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT