கிரிக்கெட்

மும்பையை வெளியேற்றிய பெங்களூரு: சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன.?

பெங்களூருக்கு எதிரான தோல்வியால் மும்பை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.

பெங்களூரு,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியால் மும்பை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில், தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;

”நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்திருந்தோம் என நினைக்கிறேன். தவறான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். எனினும், நமன் மற்றும் திலக் இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். அது அவர்களின் மன உறுதியைக் காட்டியது.

நாங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட முயற்சி செய்தோம். நாங்கள் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் (புள்ளிப்பட்டியலின் கடைசி இடம்) இருப்பதை பார்க்க கடினமாக உள்ளது. இந்த சீசன் முழுவதும் நிறைய கற்றுக்கொண்டோம். அடுத்த ஆண்டு நாங்கள் இன்னும் வலிமையாகத் திரும்புவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.