கிரிக்கெட்

குஜராத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களுரு

குஜராத் அணியில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடை பெறும் 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட் டன்ஸ் அணி. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக் கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பெங்களூரு அணியில் படிக்கல் 40 ரன்களும் , விராட் கோலி 28 ரன்களும் எடுத்தனர்.

இதனால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குஜராத் அணியில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.