கிரிக்கெட்

மும்பைக்கு எதிராக சேசிங்கில் கடைசி பந்தில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பெங்களூரு

சென்னையில் நடந்த போட்டியில், சேசிங்கில் 160 ரன்கள் என்ற இலக்கை அடைந்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

ராய்ப்பூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்த்து விளையாடியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து பெங்களூரு அணி விளையாடியது. இதில், அதிக அளவாக குருணல் பாண்ட்யா அரை சதம் (73 ரன்கள்) விளாசினார். ஜித்தேஷ் சர்மா 18, தேவ்தத் பதிக்கல் 12 ரன்கள் எடுத்தனர். ஷெப்பர்டு 4 ரன்களில் வெளியேறினார்.

புவனேஸ்வர் குமார் 7 ரன்களும், ரஷீக் சலாம் தர் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் கார்பின் 4 விக்கெட்டுகள், தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முடிவில், மும்பையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூரு அணி புதிய சாதனையை படைத்து உள்ளது. சேசிங்கில் கடைசி பந்தில் 2-வது முறையாக பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டி ஒன்றில், சேசிங்கில் 160 ரன்கள் என்ற இலக்கை அடைந்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை, பெங்களூரு அணி வீழ்த்தியது. போட்டியின் முடிவால், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கான போட்டிகளில் இருந்து வெளியேறி உள்ளன.