கிரிக்கெட்

சென்னையில் "பிக் பாஷ் லீக்" கிரிக்கெட் போட்டி: பிரதமர் மோடி, ஆஸி.பிரதமர் அறிவிப்பு

மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 ஆயிரம் பேர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மெல்போர்ன்,

பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீசுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். மைதானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 ஆயிரம் பேர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது;

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

”மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குள் அடியெடுத்து வைப்பது எந்தவொரு இந்தியருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு உணர்வுகளைத் தூண்டுகிறது. முதலாவது, இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் பரவசம். இரண்டாவது, நம் இரு நாடுகளிலும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது இரு நாடுகளின் உணர்வில் கலந்தது.

கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். விளையாட்டுப் பயிற்சி, விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நாம் ஒன்றிணைந்து முன்னேறி, களத்திலும் களத்திற்கு வெளியேயும் நமது உறவை வலுப்படுத்துவோம்.

எனது நண்பர் பிரதமர் அல்பனீஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கிரிக்கெட் எங்களை இணைக்கும் ஒரு இயல்பான புள்ளியாக அமைந்திருக்கிறது. நாங்கள் ஆமதாபாத்தில் உள்ள மைதானத்தை ஒன்றாகப் பார்வையிட்டோம். இன்று இங்கு இருக்கும்போதும், அந்த விளையாட்டு உணர்வை என்னால் உண்மையாகவே உணர முடிகிறது.” என்றார்.

சென்னையில் பிக் பாஷ் லீக்

அப்போது, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான 'பிக் பாஷ் லீக்' (BBL) தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 12ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீசியுடன் இணைந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.