கிரிக்கெட்

சென்னையில் பிக்பாஷ் லீக்: டிக்கெட் விற்பனை தொடங்கியது

பிக்பாஷ் லீக் கிரிக்கெட் இந்தியாவில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

சென்னை,

இந்த ஆண்டுக்கான பிக்பாஷ் லீக் கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிசம்பர் 12-ந் தேதி நடக்கிறது. இதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ்- பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆஸ் திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் லீக் கிரிக்கெட் இந்தியாவில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது . ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,500, ரூ.6,000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. district.in என்ற இணைய தளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT