புதுடெல்லி,
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சூர்யகுமார் யாதவுடன் அவரது மனைவி தேவிஷா, அவர்களது குழந்தை, மனைவியின் சகோதரி தீக்ஷா, மைத்துனர் அஜய் ஷெட்டி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான ராம், சரயு ஆகியோரும் சென்றிருந்தனர்.
அப்போது சிறுமி சரயு கன்னட மொழியில் பக்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்ட பிரதமர் மோடி கைத்தட்டி சிறுமியை பாராட்டினார்.
பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து சூர்யகுமார் யாதவ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. தற்போது அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும், உலகக்கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமை அவருக்கு உள்ளது.