image courtesy:twitter/@blind_cricket 
கிரிக்கெட்

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி. அணியை ஊதித்தள்ளிய இந்தியா

இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

புதுடெல்லி,

பார்வையற்றவர்களுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது.

இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கேப்டன் தீபிகா 91 ரன்களும், புலா சரன் 54 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவை, இந்திய அணியினர் 19.3 ஓவர்களில் 57 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 235 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது. இது இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT