கிரிக்கெட்

ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பிரெண்டன் டெய்லர்

11 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

துபாய்,

ஜிம்பாப்வே அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் பிரெண்டன் டெய்லர், ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த நாட்டுக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய அவர், 101 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் ஆண்டி பிளவரின் நீண்டகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.

இதற்கு முன்பு ஆண்டி பிளவர் 6,786 ரன்களுடன் ஜிம்பாப்வே அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதலிடத்தில் இருந்தார். பிரெண்டன் டெய்லர், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 81 ரன்கள் எடுத்து இந்தச் சாதனையை முறியடித்து (6,837) பிடித்தார்.

டெய்லர் ஏற்கெனவே ஜிம்பாப்வே அணிக்காக 200-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 11 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

SCROLL FOR NEXT