லண்டன்,
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஸ் பட்லர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த 10 பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர்.
பட்லர் மற்றும் பிராட் இருவரும் இணைந்து நடத்தும் 'பார் தி லவ் ஆப் கிரிக்கெட்' (For the Love of Cricket) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசும்போது இந்த பட்டியலை வெளியிட்டனர்.
இதில் ஆஸ்திரேலியாவின் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் பும்ரா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5-வது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் 6-வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 7-வது இடத்திலும், ககிசோ ரபாடா 8-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் 9-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பட்லர், பிராட் தேர்வு செய்த சிறந்த 10 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள்:
1. ஷேன் வார்னே
2. ஜேம்ஸ் ஆண்டர்சன்
3. ஜஸ்பிரித் பும்ரா
4. கிளென் மெக்ராத்
5. பேட் கம்மின்ஸ்
6. முத்தையா முரளிதரன்
7. டேல் ஸ்டெய்ன்
8. ககிசோ ரபாடா
9. ஷான் பொல்லாக்
10. மிட்செல் ஸ்டார்க்