புதுடெல்லி,
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நவம்பர் 7-ம் தேதி லிங்கனில் தொடங்கும் 3-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதேபோல் காயத்திலிருந்து மீண்டு வரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடற்தகுதி அனுமதியை பொறுத்து இந்த போட்டியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் நவம்பர் 27-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் பும்ராவும் பண்ட்டும் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது, இருவருக்கும் போட்டி அனுபவத்தை பெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.