புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியமான உடற்தகுதி அப்டேட் வெளியாகியுள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கத் தயாராகியுள்ளார். அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மீண்டும் காயம் காரணமாக இரு தொடர்களிலிருந்தும் விலகியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட இடது முழங்கால் காயம் காரணமாக பும்ரா சமீபத்திய போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இலங்கை டெஸ்ட் தொடரையும் அவர் தவறவிட்டிருந்தார்.ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் அவர் முதலில் சேர்க்கப்பட்டபோது, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தேர்வில் பும்ரா தேர்ச்சி பெற்றுள்ளதால், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அவரது வருகை அமைந்துள்ளது