கிரிக்கெட்

பவுன்சர் போட்டா சிக்சர் போகுமா?... கிரிக்கெட் வரலாற்றிலேயே நடக்காத விசித்திர சம்பவம்!

வான்கூவர்,

கனடா சூப்பர் 60 கிரிக்கெட் தொடரில் பவுன்சர் பந்து பேட்ஸ்மேனை தாண்டி மைதானத்தில் படாமல் நேரடியாக எல்லைக்கோட்டைத் தாண்டி சென்ற சுவாரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பேட்ஸ்மேனை கடந்து பறந்த பந்து

கனடா சூப்பர் 60 தொடரின் அரையிறுதிப் போட்டியில் டொராண்டோ சிக்சர்ஸ் மற்றும் மிசிசாகா மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் கீரன் பொல்லார்டுக்கு பவுன்சர் பந்தை வீசினார்.

22 யார்டு ஆடுகளத்தில் பிட்ச் ஆன அந்த பந்து, வழக்கத்தைவிட அதிக உயரத்திற்கு எழுந்து, பேட்ஸ்மேனையும் விக்கெட் கீப்பரையும் கடந்து சென்றது. பின்னர் மைதானத்தில் மீண்டும் படாமல் நேரடியாக எல்லைக்கோட்டைத் தாண்டியது.

5 ரன்கள் மட்டுமே!

பந்து நேரடியாக எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றதால் சிக்சர் + வைட்காக 1 ரன்னும் வழங்கப்படும் என அனைவரும் எதிர்பாரத்தனர். ஆனால் அந்த பந்து பேட்டில் படாமல் சென்றதால், விதிப்படி அது சிக்சராகக் கணக்கிடப்படாது. 1 வைட் ரன் + எல்லையைத் தாண்டியதற்கான 4 ரன்கள் என மொத்தம் 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

சிறிய மைதானம்... காரணம் என்ன?

இந்த சம்பவத்திற்கு வான்கூவரில் உள்ள பி.சி. பிளேஸ் மைதானத்தின் சிறிய எல்லைக்கோடுகளும் முக்கிய காரணமாக அமைந்தன.

பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் எல்லைக்கோடு வெகு தொலைவில் இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் கால்பந்து போட்டிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கிற்குள் செயற்கை கிரிக்கெட் ஆடுகளம் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனால் கிரிக்கெட்டுக்கான எல்லைக்கோடு வழக்கத்தைவிட மிகவும் குறுகியதாக இருந்தது. இதன் காரணமாகவே, பந்து நேரடியாக எல்லைக்கோட்டைத் தாண்டியது. இந்த விசித்திரமான சமபவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT