டெல்லி,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம், கனடா அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த லீக் ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டாஸ் வென்ற கனடா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லியில் உள்ள மைதானத்தில் ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.