செயின்ட் லூசியா,
14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெவிஸ் பேட்ரியாட்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கீமோ பால் அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் 18 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்சை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜமைக்கா கிங்ஸ்மென் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஜமைக்கா வீரர் கீமோ பால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட கீமோ பால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.