கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு..காரணம் என்ன ?

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனேவைச் சேர்ந்த வஜித் கான் என்ற வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்தின் போது தேசியக் கொடியை அணிந்தபடி, காதலி மஹிகா ஷர்மாவுடன் கீழே படுத்திருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.