கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பையை வென்ற தமிழக வீரர்களுக்கு ரொக்கப்பரிசு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் (19 வயதுக்கு உட்பட் டோர்) இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அம்பிரிஷ் இறுதிப்போட்டியில் 3 விக்கெட் உள்பட மொத்தம் 11 விக்கெட்டும், தீபேஷ் 6 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இருவருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.