புதுடெல்லி,
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கடந்த இரண்டு சீசன்களில் இந்தப் பொறுப்பில் இருந்த முனாப் படேலுக்குப் பதிலாக வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள வாஸ், சர்வதேச அளவில் பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்றவர்.
மேலும், 2008 முதல் 2010 வரை ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவிளையாடியுள்ளார். அவரது சர்வதேச அனுபவமும் ஸ்விங் பந்துவீச்சில் உள்ள நிபுணத்துவமும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.