கிரிக்கெட்

"விராட் கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம்" - முன்னாள் நடுவர் அனில் சவுத்ரி கருத்து

விராட் கோலி கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடினார்.

சென்னை,

விராட் கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே விராட்டை தெரியும்

இதுகுறித்து பேசிய அனில் சவுத்ரி, "விராட் கோலியின் சிறுவயது போட்டிகளிலிருந்தே நான் நடுவராக இருந்துள்ளேன். அதனால் அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அவரிடம் எந்தவிதமான தீய எண்ணமும் கிடையாது" என்று கூறினார்.

ஆக்ரோஷம் இருந்தாலும் பாராட்ட தெரியும்

மேலும் அவர் கூறுகையில், "சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார். ஆனால் நீங்கள் சரியாக இருந்தால் அதை மனதார பாராட்டவும் செய்வார். ஓவர்களுக்கு இடையே வந்து தோளில் கைபோட்டு இயல்பாக பேசுவார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். அவரைப் போன்ற வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். இல்லையெனில், ஆட்டம் சலிப்பூட்டுவதாக மாறிவிடும்" என்றார்.

அடுத்த போட்டி

விராட் கோலி கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடினார். அடுத்ததாக செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கவுள்ளார்.