கிரிக்கெட்

சென்னை அணியின் உதவி பயிற்சியாளர்...யார் இந்த கேரத் பேடி ? ..விவரம்

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் 2027 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது பயிற்சியாளர் குழுவில் முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது. இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்ரே அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான கேரத் பேடி சென்னை அணியின் உதவிப் பயிற்சியாளராக இணைய உள்ளார். இவர் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானுடன் இணைந்து பணியாற்றுவார்.

கேரத் பேடி யார்?

1977ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இங்கிலாந்தின் பிராட்ஃபோர்டில் பிறந்த கேரத் பேட்டி, வலதுகை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர் ஆவார். இவர் இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகள், 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டைவிட இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார்.

சர்ரே அணியில் படைத்த சாதனை!

கேரத் பேட்டி 2022ஆம் ஆண்டு சர்ரே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் அந்த அணி 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை கவுண்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொடரில் தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்ற அணியாக சர்ரே சாதனை படைத்தது. 2025ஆம் ஆண்டில் அந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

சர்ரே அணியிலிருந்து விலகும் பேடி!

சர்ரே அணியுடன் வீரர், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் 21 ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்த கேரத் பேட்டி, தற்போது அந்த அணியிலிருந்து விலகி CSK அணியில் புதிய பயணத்தைத் தொடங்குகிறார். தனது புதிய பொறுப்பு குடும்பத்திற்கும் தனக்கும் மகிழ்ச்சியளிக்கும் வாய்ப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT