கிரிக்கெட்

சென்னை அணி ரசிகர்களின் ஆதரவு ஒருபோதும் தளர்ந்ததில்லை: பிரேவிஸ்

'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை தொடர்ந்து 3-வது முறையாக 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு போட்டியை 6 வெற்றி, 8 தோல்வி என 12 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை வீரர் டேவால்ட் பிரேவிஸ் கூறியதாவது,

வெற்றிகள், நெருக்கடியான தருணங்கள், மற்றும் எதுவும் சரியாக அமையாத நாட்கள் என அனைத்திலும், சென்னை ரசிகர்களின் ஆதரவு ஒருபோதும் தளர்ந்ததில்லை.
இந்த சீசன் முழுவதும் கடினமாக உழைத்த எங்கள் பயிற்சியாளர்கள், துணைப் பணியாளர்கள், நிர்வாகம், மைதானப் பணியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கு மனமார்ந்த நன்றி. நாங்கள் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கினோம், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நட்பையும் கட்டியெழுப்பினோம்.இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்தபடி முடிவடையாமல் இருக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் இன்னும் வலிமையாகத் திரும்புவோம். என தெரிவித்துள்ளார்.