லக்னோ,
லக்னோவில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 187 ரன்கள் எடுத்தது.
பின்னர் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் வெறும் 2.4 ஓவர் மட்டுமே வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 63 ரன்களை வாரி வழங்கினார். அன்ஷுல் கம்போஜ் ஓவரில் மட்டும் லக்னோ பேட்ஸ்மேன்கள் 8 சிக்சர்களைப் பறக்கவிட்டனர். ஐபிஎல் தொடரில் அன்ஷுல் வீசிய 2 ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.