கிரிக்கெட்

ஐபிஎல் - குஜராத்துக்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சென்னை அணி

விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறி வருகிறது.

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

இதில் சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதி வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடி வரும் சென்னை அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் 11(15) ரன்களிலும் அடுத்து வந்த உர்வில் படேல் 4(3) ரன்களிலும் தொடர்ந்து வந்த சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்தது.

பின்னர் இணைந்த கெய்க்வாட் - பிரெவிஸ் ஜோடி ரன் சேர்ப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், பிரெவிஸ் 2(9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தற்போது கெய்க்வாட்டுடன் சிவம் துபே ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்து சென்னை தடுமாறி வருகிறது.