கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை - கொல்கத்தா இன்று மோதல்

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

சென்னை,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. 4 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேவேளை 4 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா 3 தோல்வி, 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது) உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் பாடுபடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.