கிரிக்கெட்

உள்ளூர் திறமைகளை தவற விட்ட சென்னை அணி: முன்னாள் வீரர் ஆதங்கம்

சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அணி தொடர்பாக பேசியுள்ள முன்னாள் வீரர் எல்.பாலாஜி கூறியதாவது,

கடந்த 10-12 ஆண்டுகளில் பல உள்ளூர் திறமைகளை சென்னை அணி தவறவிட்டுவிட்டனர். முன்பு விபி சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்து என்னையும், பத்ரிநாத்தையும் முதன்மை தேர்வாக வைத்திருந்தார். பின்னர் சொந்தமண்ணில் அவ்வளவுதான் திறமையா என்ற கேள்வி எழ, அடுத்த வீரர்களாக முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் எடுக்கப்பட்டனர். தற்போது அது நடப்பதில்லை, அதை சிஎஸ்கேசெய்தாகவேண்டும். அது தமிழ்நாடு என இல்லாமல், விதர்பா, பஞ்சாப் என எங்கிருந்து வேண்டுமானாலும் உள்ளூர் திறமைகளை அணியில் சேர்க்கலாம். தொடர்ந்து ஒரே டெம்ப்ளேட்டில் சிஎஸ்கே செல்லாமல், உள்ளூர் திறமைகளை சரியாக பயன்படுத்தவேண்டும்.என தெரிவித்துள்ளார்.