கிரிக்கெட்

ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ஆயுஷ் மாத்ரே விலகல் ?

திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

சென்னை,

ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் பேட்டிங் வந்த சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஓட முடியாமல் தவித்த மாத்ரே அடுத்த ஒரு சில பந்துகளிலேயே அவுட்டானார்.

இந்த நிலையில், காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.