சென்னை,
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதி யாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்க ளுக்கு வித்தியாசமான ஒரு போட்டி நடத்தப்பட் டது. அதாவது ஒரு பெரிய போர்டில் அனைத்து வீரர்களின் பெயர்களும் தமிழில் எழுதப்பட்டிருக் கும். அதை வீரர்கள் சரியாக கண்டறிந்து தங்களது பெயரை பார்த்து அருகில் தமிழில் எழுத வேண்டும். போர்டில் மூத்த வீரர் தோனியின் பெயர் முதலில் இருந்தது. அதை அவர் எளிதில் கண்டறிந்து உற்சாகமாக எழுதினார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சனும் தங்களது பெயரை தமிழில் அழகாக எழுதினர்.