கிரிக்கெட்

சென்னை அணியின் முக்கிய வீரர் விலகல்

சென்னை அணி தொடர்ச்சி யாக 2-வது வெற்றியை பெற்றது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத் தில் 193 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 160 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தொடர்ச்சி யாக 2-வது வெற்றியை பெற்றது. சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் 18ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரர் கலீல் அகமது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.