கிரிக்கெட்

யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான முடிவாக இருக்கும்: ஷ்ரேயாஸ் அய்யர்

யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான முடிவாக இருக்கும் என இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா வைபவ் சுர்யவன்ஷி ஆகியோரில் யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான முடிவாக இருக்கும் என இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வர கூறியதாவது,

அந்த மூன்று வீரர்களும் ஒரே அணியில் இருப்பது முதலில் நமக்குக் கிடைத்த ஒரு பெரிய வசதியாகும். அவரவர் பொறுப்புகளில் மூவருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். எனவே, இவர்களில் யாரைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமான முடிவாக இருக்கும். ஏனென்றால், மூவருமே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அது நிச்சயமாக அணியின் நன்மைக்காகத்தான் இருக்கும்.என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT