புதுடெல்லி,
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
36 வயதான புவனேஷ்வர் குமார், 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.
எனினும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாகவும் சீராகவும் பந்துவீசியதன் மூலம் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
புவனேஷ்வர் குமாரின் தேர்வு குறித்து சுரேஷ் ரெய்னா தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “மீண்டும் வருக புவி! இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் திறமையான பந்துவீச்சாளர்களில் ஒருவரான உங்களுக்கு மீண்டும் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் காட்டிய ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் மனஉறுதி மிகவும் ஊக்கமளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் தொடங்கி ஐபிஎல் வரை பயணித்து, இப்போது மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்திருப்பது முற்றிலும் தகுதியானது.
தொடர்ச்சியான கடின உழைப்புக்கான பலன் எப்போதும் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு உங்கள் பயணம் ஒரு நினைவூட்டல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார். இந்தத் தொடர் அக்டோபர் 22-ந்தேதி தொடங்குகிறது.
இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய டி20 அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், சிவம் துபே, நிதீஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்.