கிரிக்கெட்

கூப்பரின் சதம் வீண்; 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஐதராபாத்

20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது.

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 235 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் கிளாசன் 55 ரன்களும் , இஷான் கிஷன் 69 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின்னர் பஞ்சாப் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், கூப்பர் கன்னோலி நிலைத்து ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் (107 ரன்கள்) அணியை வழிநடத்தினார்.

ஆனால், மறுபுறம் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன. இதனையடுத்து, 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது. ஐதராபாத்தின் பேட் கம்மின்ஸ் மற்றும் ஷிவாங் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால், பஞ்சாப்பை 33 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.