திண்டுக்கல்,
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து போகர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, ஆனந்த விநாயகர் சன்னதியிலும் வழிபட்டார்.
இதற்கிடையே மலைக்கோவிலுக்கு நடராஜன் வந்ததை பார்த்த ஏராளமான பக்தர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரம் வந்த நடராஜன், அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.