கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்கள் கோல்ப் விளையாட வேண்டும்: யுவராஜ் சிங்

அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்களது இளம் வயதில் கோல்ப் விளையாடி இருக்கிறார்கள்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த 2-வது இந்திய கோல்ப் பிரிமீ யர் லீக் போட்டிக்கான அணிகளின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அந்த போட்டிக்கான தூதரும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரு மான யுவராஜ்சிங் பின்னர் அளித்த பேட்டியில்,

'கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டுடன் கோல்ப்பும் விளையாட வேண்டும். நானும் சிறு வயதில் கோல்ப் விளையாடி இருந்தால் அது கிரிக்கெட்டுக்கு உதவிகரமாக இருந்தி ருக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கோல்ப் விளையாட்டு உங்களை ஆசுவாசப்படுத்தவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவு கிறது. உதாரணமாக வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா என அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்களது இளம் வயதில் கோல்ப் விளையாடி இருக்கிறார்கள். கோல்ப்பை நாம் உயர்மட்டத்தினருக்கான விளையாட்டாக பார்க்கிறோம். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு சிறுவர், சிறுமியரும் கோல்ப்பை விளையாடி பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். பள்ளி அளவில் கோல்ப்பை எடுத்து செல்ல முயற்சித்து வருகிறோம். கிரிக்கெட் தான் நமது நாட்டில் மிகப்பெரிய விளையாட்டு என்பதை அறிவேன். ஆனால் கோல்ப் உற்சாகமான ஒரு போட்டி. ஒவ்வொருவரும் அதை விளையாட முயற்சி செய்யுங்கள்' என்றார்.